உ.பி.யில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்தியாஉ.பி.யில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ராஜேந்திர சிங் கூறுகையில்,
இசட்நகர் மண்டலத்தில் உள்ள கஸ்கஞ்ச் - ஃபருகாபாத் வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு சரக்கு ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
மேலும் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவ்வழியே வந்த பாகல்பூர் - காந்திதம் ரயில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.