Bihar boat capsize: 1 dead, 10 missing 
இந்தியா

பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் காணவில்லை

பிகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் காணாமல் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

IANS

பிகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் காணாமல் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கோபால்பூர் தொகுதியில் உள்ள டின்டாங்கா கராரி கிராமத்தைச் சேர்ந்த குறைந்துது 100 பயணிகள் படகில் பயணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆவார். 

டின்டாங்கா காட்டின் அருகில் நீரின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் படகு நிலைதடுமாறி திடீரென தண்ணீரில் கவிழ்ந்துள்ளது என்று கோபால்பூர் காவல்நிலைய பொறுப்பாளர் மணி பஸ்வான் தெரிவித்துள்ளார். 

இதில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பிற்காக நீந்தியுள்ளனர். 10 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒரு பெண்ணின் சடலத்தை மீட்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன்மேல லவ்ஸ்... ஷில்பா மஞ்சுநாத்!

காலனித்துவ காலத்தில் இருக்கிறோமா? ஓவல் பிட்ச் மோதல் பற்றி முன்னாள் வீரர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

பிளாக்மெயில் வெளியீடு ஒத்திவைப்பு!

உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT