ஹரியாணாவில் தனியார் துறையில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்
தனியார் துறை வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியாணாவில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தனியார் துறை வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியாணாவில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ளூர் மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் துஷ்யந்த் செளதாலா தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவிகித பணிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜேஜேபி கட்சியின் துஷ்யந்த் செளதாலா தேர்தல் வாக்குறுதியாக தனியார் துறை இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.