பெங்களூருவில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ள அதேவேளையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனினும் மீன்பிடிக்கச் செல்ல எந்தவிதமாக தடை அறிவிப்பும் வெளியாகவில்லை.