இந்தியா

மணிப்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19% வாக்குப்பதிவு

DIN

மணிப்பூரில் காலியாக உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றுவரும் இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

மணிப்பூரில் முதல்வர் நோங்தோம்பம் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதனிடையே மணிப்பூர் காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்ததால், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நான்கு தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் காலை 11 மணி நிலவரப்படி 19.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT