முகப்பு
இந்தியா

பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம் (கோப்புப்படம்)
பகிர்:

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வராக நிதீஷ் குமார் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற முடிவுகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றியது.

குறைந்த இடங்களை கைப்பற்றியிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதீஷ் குமாரே முதல்வராக நீடிப்பார் என்று பாஜக அறிவித்திருந்தது. 

நவம்பர் 29-ஆம் தேதியுடன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதால், நேற்று தமது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்தார். இதனை ஆளுநர் பகு செளஹானும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →