இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்: அமித் ஷா, நட்டாவிற்கு கோரிக்கை

DIN

கொல்கத்தா: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமித் ஷாவும், ஜெ.பி. நட்டாவும் மாதமொருமுறை மேற்குவங்கத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே தேர்தலையொட்டி கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனித்தனியாக மாதமொருமுறை மேற்குவங்கத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று திலிப் கோஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இருவரும் தனித்தனியாக மேற்குவங்கம் சென்று வருகின்றனர்.

இம்மாதம் ஜெ.பி. நட்டா இருமுறையும், அமித் ஷா மூன்று முறையும் மேற்குவங்கத்திற்கு வருகை புரிந்துள்ளதாக மாநில பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், ''மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே தேர்தல் முடியும் வரை மேற்கு வங்கத்திற்கு மாதமொருமுறை அமித் ஷாவும், நட்டாவும் வருகைபுரிய வேண்டும். தலைவர்களின் வருகை தொண்டர்களை உற்சாகப்படுத்தும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT