ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்திலுள்ள ஹரிநகர் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி இல்லங்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த மோட்டார் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த பெண் கத்துவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜம்மு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.