முகப்பு
இந்தியா

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
இந்திரா காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
பகிர்:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 

'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தில்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் கட்சி அலுவலகங்களில் இந்திராவின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யான ராகுல் காந்தி, இந்திராவின் நினைவிடத்தில் வியாழக்கிழமை மலர் அஞ்சலி செலுத்தினார். 

Advertisement

மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது பாட்டி இந்திரா காந்தி திறமையான பிரதமர் மட்டுமின்றி 'சக்தியின் மறு உருவம்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

மேலும், 'இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒட்டுமொத்த நாடும், இன்றும் கூட, அவரது தலைமைப் பண்பைப் பற்றி பேசுகையில், நான் எனது பாட்டியை நினைவு கூர்கிறேன். அவரை நினைத்துக்கொண்டு நான் ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்திக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

நவம்பர் 19, 1917 இல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு - கமலா நேருவுக்கு மகளாகப் பிறந்த இந்திரா காந்தி, நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். 1966 - 1977 , 1980- 1984 காலகட்டத்தில் பிரதமாறாக இருந்த அவர் 1984 அக்டோபர் 31 அன்று படுகொலை செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments