மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வரைவு எங்கே? காங்கிரஸ் கேள்வி!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வரைவு எங்கே? என காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியது குறித்து...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் வரைவு எங்கே? என காங்கிரஸ் தலைவரும் கர்நாடகத்தின் அமைச்சருமான பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயா்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப்.8) ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் சிறப்பு அமா்வில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்க் கார்கே, “அந்த மசோதா என்ன? அது எதைப்பற்றியது? அமைச்சரவை இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால், இதை அவசரமாக நிறைவேற்றுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம், குறிப்பாகப் பெண்களிடம், கலந்தாலோசிக்க வேண்டாமா?
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்கள். இது 2020-லேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் இல்லாமலேயே தொகுதி மறுவரையறையை செய்ய விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Priyank Kharge, a Congress leader and Karnataka Minister, has raised the question: "Where is the draft of the Women's Reservation Bill?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.