முகப்பு
இந்தியா

மேக்கேதாட்டு விவகாரத்தில் கருத்துகள் முக்கியமில்லை! தமிழக காங்கிரஸ் எதிர்ப்புக்கு கர்நாடக அமைச்சர் பதில்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எதிர்ப்புக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதில்...

Updated On : 3 ஜூலை 2026, 4:43 pm IST
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே - தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவமில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

கர்நாடகத்தில், புதியதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கு ஒரு செங்கலைக் கூட அனுமதிக்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மாணிக்கம் தாகூரின் பேச்சு தனிப்பட்ட கருத்து எனவும், அதற்கு இங்கு முக்கியத்துவம் இல்லை எனவும், கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

இதுபற்றி, இன்று (ஜூலை 3) அவர் கூறியதாவது:

“நானோ அல்லது நீங்களோ யாராக இருந்தாலும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படியே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான நீர் கடலில் கலப்பதாக அவர்கள்தான் (தமிழ்நாடு) கூறினார்கள்.

மேலும், கன்னடர்கள் ஆற்று நீரை நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்றும் அவர்களே கூறினார்கள். இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். தனிப்பட்ட கருத்துகளுக்கு இங்கு முக்கியத்துவம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராம்நகரா மாவட்டத்தில் காவிரி மற்றும் அரகாவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Karnataka Home Minister Priyank Kharge has stated that personal opinions don't matter in the Mekedatu issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments