வங்கதேசத்தினர் பெங்களூருக்கு எப்படி வருகிறார்கள்? பிரியங்க் கார்கே
வங்கதேசத்தினர் பெங்களூருக்கு எப்படி வருகிறார்கள்? என்று பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியது பற்றி...
வங்கதேசத்தினர் பெங்களூருக்கு எப்படி வருகிறார்கள்? என்று மத்திய அரசை நோக்கி கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சனிக்கிழமை (ஜூலை 11) கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆர்) கர்நாடக மாநிலம் நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்களை அறிமுகப்ப்டுத்தியுள்ளன.
இதன்மூலம், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள வங்கதேசத்தினர் இந்தியக் குடியுரிமை பெறவும் அரசின் திட்டங்களை அனுபவிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கர்நாடக அரசின்மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
Advertisement
Advertisement
இதுகுறித்து அமைச்சர் பிரியங்க் கார்கே பேசியதாவது:
நாங்கள் வங்கதேசத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்குவதாக அவர்கள் (பாஜக) குற்றம் சுமத்துகின்றனர். என்னுடைய கேள்வி என்னவென்றால், பெங்களூருக்கு வங்கதேசத்தைச் சேரந்தவர்கள் எப்படி வருகிறார்கள்? சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?
வங்கதேசத்தினருக்கு இருப்பிடச் சான்றிதழ்களை வழங்கும் அளவுக்கு மாநில அரசு முட்டாள்தனமானதா? நாங்கள் பொறுப்புள்ள அரசை வழிநடத்திக் கொண்டுள்ளோம்.
எஸ்ஐஆர் தொடர்பாக நாங்கள் செய்ய முயற்சிக்கும் விஷயத்தில் பாஜகவால் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் இதுமாதிரியான தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
Karnataka Minister Priyank Kharge has questioned the Central Government about how people from Bangladesh are coming to Bengaluru.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.