முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளுக்கு பார்வையாளர் விசா ரத்து: அரபு நாடுகள்

பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு பார்வையாளர்கள் விசா வழங்குவது தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.

Updated On : 19 நவம்பர், 2020 at 1:22 PM
பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளுக்கு பார்வையாளர் விசா ரத்து: அரபு நாடுகள்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு பார்வையாளர்கள் விசா வழங்குவது தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை காரணமாக, ஐக்கிய அரபு நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று நம்புவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், துருக்கி, இரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பார்வையாளர் விசா வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

Advertisement

கடந்த சில நாள்களாக இந்த நாடுகளில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.