முகப்பு
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் மரணம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் இன்று காலமானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் இன்று காலமானார். 

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் (71). முன்னதாக, இவர் தனக்கு கரோனா தொற்று உள்ளதாக, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி சுட்டுரையில் அறிவித்தாா். 

அதைத் தொடா்ந்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. இதனால், அவா் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் காலமானார். இத்தகவலை அவரது மகன் ஃபைசல் அகமது சுட்டுரையில் உறுதி செய்துள்ளார். 

மறைந்த அகமது படேல், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.