பாகிஸ்தான் தாக்குதல்: ரஜௌரியில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ரஜௌரி மாவட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு: இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ரஜௌரி மாவட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பிரேம் பகதுர் கத்ரி மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் பாகிஸ்தான் தாக்குதலில் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக பாதுகாப்புப் படையின் லெப்டினன்ட் கலோனல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரஜௌரி மாவட்டம் சுந்தர்பானி செக்டார் அருகே, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச்சில், நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.