மகாராஷ்டிரத்தில் மேலும் 10,244 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,244 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,244 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 10,244 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,53,653 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 263 பேர் பலியாகியுள்ளனர். 12,982 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 38,347 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 11,62,585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,52,277 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
மும்பை:
மும்பையில் மேலும் 1,813 பேர் கரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 47 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மொத்தம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24,199 ஆக உள்ளது. மொத்தம் 9,152 பேர் பலியாகியுள்ளனர்.