முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 5,042 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,042 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 அக்டோபர், 2020 at 8:05 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM


கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,042 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றி மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கேரளத்தில் புதிதாக 5,042 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 102 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 4,338 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 450 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களில் 4,640 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84,873 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,49,111 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.