முகப்பு
இந்தியா

ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கரோனா

ஒடிசாவில் 3,000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

Updated On : 5 அக்டோபர், 2020 at 1:02 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

ஒடிசாவில் 3,000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

கரோனா பொதுமுடக்க காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் செயல்பட்டன. கரோனா முன்களப் பணியாளர்களின் வரிசையில் வங்கி ஊழியர்கள் அதிகமானோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் இதுவரை 3,066 வங்கி ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு வெளியிட்டுள்ள தகவலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 968 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுப்படி, ஒடிசாவில் 30,301 பேர் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,98,194 பேர் குணமடைந்த அதேநேரத்தில் 892 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.