பிகார் தேர்தலில் பாஜகவுக்கு 121 இடங்கள்: நிதிஷ் குமார் அறிவிப்பு
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் ஜேடியு மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறத் தொடங்கின.
இந்த நிலையில் கூட்டணியில் பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:
"ஜேடியு-க்கு 122 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 7 தொகுதிகள் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்படுகிறது. பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விகாஷ்ஹீல் இன்சான் கட்சி ஒதுக்கப்படவுள்ள இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது."