கேரளத்தில் மேலும் 7,871 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 7,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் புதிதாக 7,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:
"புதிதாக 7,871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர். மேலும் 25 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 87,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்."
Advertisement
அங்கு நேற்று 5,042 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.