இந்தியா

பிகார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

DIN


பிகார் பேரவைத் தேர்தலுக்காக 27 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக போட்டியிடும் தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பாஜக 121 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், 27 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் துப்பாக்கிச் சூடு வீராங்கனை ஷ்ரேயாஸி சிங் ஜாமுய் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பாஜகவில் இணைந்தார். 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT