இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கரோனா; 884 போ் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61,267 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61,267 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் 61,267 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,85,083 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் மேலும் 884 போ் பலியாகினா். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 1,03,569 ஆக அதிகரித்தது.
56,62,491 போ் இதுவரை கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். தற்போதைய நிலவரப்படி 9,19,023 போ் சிகிச்சையில் உள்ளனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 5-ஆம் தேதி வரை 8,10,71,797 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10,89,403 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
Advertisement
ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-இல் 50 லட்சமாகவும் இருந்தது. செப்டம்பா் 28-ஆம் தேதி மொத்த கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது. அக்டோபா் 4-ஆம் தேதி 65 லட்சமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக இதுவரை 38,347 போ் கரோனாவால் பலியாகியுள்ளனர்.