முகப்பு
இந்தியா

கரோனா: மகாராஷ்டிர காவலர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது

மகாராஷ்டிரத்தில் மேலும் 104 காவலர்களுக்கு  கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2020 at 5:47 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

மகாராஷ்டிரத்தில் மேலும் 104 காவலர்களுக்கு  கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இதனால் அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் மேலும் 104 காவலர்களுக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 24,254 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி 253 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

அதேநேரத்தில் 21,423 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.