முகப்பு
இந்தியா

டி.கே.சிவகுமாரின் சகோதரருக்கு கரோனா தொற்று

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 6 அக்டோபர், 2020 at 5:18 PM
டி.கே.சிவகுமார்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டி.கே. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இன்றைய கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

Advertisement

அதேபோன்று நேற்று என் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊடக நண்பர்களையும் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சுரேஷின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும், சிவகுமாருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர்  சிகிச்சை பெற்று குணமடைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.