குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 
இந்தியா

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பஸ்வான் வியாழக்கிழமை புதுதில்லியில் காலமானார்.

அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்திக் குறிப்பில், “மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவின் மூலம் நாடு ஒரு தொலைநோக்கமுள்ள தலைவரை இழந்துள்ளது. பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் பணியாற்றிவராகவும் அவர் இருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த பாஸ்வான் அம்மக்களின் மனங்களை வென்றவர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT