27 மாணவர்களுக்கு கரோனா : 4 கர்னூல் தனியார் பள்ளிகள் மூடல் 
இந்தியா

27 மாணவர்களுக்கு கரோனா : 4 கர்னூல் தனியார் பள்ளிகள் மூடல்

கேரள மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாணவ, மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள 4 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ENS


கர்னூல்: கேரள மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாணவ, மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள 4 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஸ்ரீசைலம் மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 169 பள்ளி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதை அடுத்து, தனியார் பள்ளிகளை மூட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நான்கு தனியார் பள்ளிகளையும் 10 நாள்களுக்கு மூடும்படி மாவட்ட ஆட்சியர் ஜி. வீரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விரிவான ஆய்வு நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளியை திறப்பதற்கு முன்னேற்பாடாக, மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை கேட்டறியும் வகையில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பள்ளி மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுகாதார, கல்வித் துறை, வருவாய் மற்றும் பஞ்சாயத்து ராஜ், காவல்துறையினர் மாணவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பெற்றோர் மற்றும் அவர்களது அண்டை வீட்டாருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

அப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

சவுடு மண் எடுக்க பொதுமக்கள் எதிா்ப்பு

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT