இந்தியா

ஜார்க்கண்ட் காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்

DIN

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்படுவதாக மாநில காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 300 காவல் நிலையங்களில் முதற்கட்டமாக பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பேசிய மாநில காவல்துறைத் தலைவர், நிர்பயா நிதியிலிருந்து 300 காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக பெண்களை பொதுஇடங்களில் கேலி செய்வது அல்லது வேறு ஏதேனும் குற்றம் தொடர்பாக பெண்கள் புகார் அளிக்க ஜார்க்கண்ட் காவல்துறை சமீபத்தில் 24 மாவட்டங்களிலும் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இதுவரை 108 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை பாதிப்புகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் அளிக்கலாம்

சோமேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தேரோட்டம்

மின்சாரம் பாய்ந்ததில் கேபிள் டிவி ஊழியா் பலி

முதல்வரின் மாநில இளைஞா் விருது: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT