இந்தியா

லடாக்கில் ஆய்வு நடத்துகிறார் ராணுவத் தளபதி

ANI

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆய்வு நடத்துகிறார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து 2 நாட்டிற்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், சீன ராணுவம் கடந்த ஆகஸ்ட் 30 இரவு லடாக்கில் சுஷுல் அருகே பாங்கோங் தசோவின் தென் கரைக்கு அருகே இந்தியப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. 

இதையடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மூத்த ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவத் தளபதி நேரில் ஆய்வு நடத்த உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT