கோப்புப்படம் 
இந்தியா

நாடு முழுவதும் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: 50 பேர் கைது

நாடு முழுவதும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்ததாவது: 
நாடு முழுவதும் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 50 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆன்லைனில் சட்டவிரோத ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடியில் ஈடுபட்ட கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை முறியடித்துள்ளனர். 

"மோசடி கும்பலின் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டு அதன் அமைப்பு அழிக்கப்பட்டு 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவிலான நடவடிக்கையாகும். அவர்கள் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுள்ளனர், இதனால் அவர்களின் பணப் பரிமாறறத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று குமார் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

SCROLL FOR NEXT