இந்தியா

ராம ஜென்ம பூமி அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் திருட்டு

DIN

அயோத்தியில் ராமர் கோவில் பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி  அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து அடையாளம் தெரியாத நபர்களால் ரூ.6 லட்சம் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோவில் உள்ள இரண்டு வங்கிகளில் காசோலை மூலமாக பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 1ஆம் தேதி வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சமும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ரூ.3.5 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.9.86 லட்சத்தை எடுக்க முயன்றபோது அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் வங்கிக்கு தெரிவித்த தகவலின் பேரில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக அயோத்தி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கை விசாரிக்க இணைய நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT