முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 22084 பேருக்கு கரோனா தொற்று உறுதி 

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 22 ஆயிரத்து 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
மகாராஷ்டிரத்தில் மேலும் 22084 பேருக்கு கரோனா தொற்று உறுதி 
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 22 ஆயிரத்து 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றானது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 84 பேர் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 765 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 391 பேர் நோய் தொற்றுக்கு பலியாகினர். 

மேலும் ஒரே நாளில் 13 ஆயிரத்து 489 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 512ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 768 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →