இந்தியா

கேரளத்தில் மேலும் 2,885 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் மேலும் 2,885 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"கேரளத்தில் புதிதாக 2,885 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 566 பேருக்கும், மலப்புரத்தில் 310 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, கரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 42 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 137 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 2,640 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 287 பேருக்கு எதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,944 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 28,802 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 75,848 பேர் குணமடைந்துள்ளனர். 2,03,300 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் உள்ளனர். 2,576 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT