இந்தியாவில் செப்.17 வரை 6,15,72,343 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் செப்டம்பர் 17 வரை 6.15 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் 17 வரை 6.15 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி,
நாட்டில் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை 6 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 343 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்து 06 ஆயிரத்து 615-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பரிசோதனை அதிகரித்து வருவதன் மூலம் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று பரவலை தடுக்க வாய்ப்புள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 1,174 பேர் பலியாகியுள்ளனர்.