முகப்பு
இந்தியா

வெங்கய்ய நாயுடு தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை

​மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
கோப்புப்படம்
பகிர்:


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கய்ய நாயுடு இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மேலும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த கடிதம் குறித்து நாளை (திங்கள்கிழமை) பரிசீலிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →