முகப்பு
இந்தியா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 12,06,806 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2020 at 3:38 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 12,06,806 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகதாரத்துறை வெளியிட்ட தகவலில், கரோனாவை எதிர்த்து இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனையாக நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் (12,06,806) அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மொத்த கொவட்-19 பரிசோதனைகள் 6,36,61,060 கோடியைத்  தாண்டி உள்ளன. கொவைட்-19 பரிசோதனை உள்கட்டமைப்பு நாட்டில் மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதை இது தெளிவாக காட்டுகிறது.

Advertisement

ஏப்ரல் 8 அன்று ஒரு நாளைக்கு வெறும் பத்தாயிரம் பரிசோதனைகளை மட்டுமே நாடு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இது லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் மட்டுமே ஒரு கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக அளவிலான பரிசோதனைகள் பாதிப்புகளை விரைவில் கண்டறியவும், சரியான நேரத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழிவகுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.