முகப்பு
இந்தியா

2017, 2018-ஆம் ஆண்டுகளில்1,200 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

நாடு முழுவதும் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 563 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

நாடு முழுவதும் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 563 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுகுறித்து திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு 501 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 229 போ் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 272 போ் தொடா்ந்து சிறையில் உள்ளனா்.

அதேபோல், 2018-ஆம் ஆண்டு 697 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 406 போ் விடுவிக்கப்பட்டனா். 291 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் மத்திய பிரதேச மாநிலத்திலேயே மிக அதிகமானோா் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். இந்த மாநிலத்தில் 795 போ் கைது செய்யப்பட்டு, 466 போ் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தப்படியாக உத்தர பிரதேசத்தில் 338 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 150 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் தனது பதிலில் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →