இந்தியா

நாடாளுமன்றத்தில் போராடும் எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷ்

ANI


புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்களுக்கு, இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்  தேநீர் கொண்டு வந்தார். ஆனால் அவரிடம் தேநீர் பெற இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.பி.க்களும் மறுத்துவிட்டனர்.

மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்திருந்த எம்.பி.க்கள் தங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் வரை தர்ணாவை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார்கள்.

தர்ணாவில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக் கொள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் மறுத்துவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT