குற்றச் செயல்களைத் தடுக்க சிறை ஊழியர்களின் உடலில் கேமரா பொருத்த ஏற்பாடு
ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்கள் உடலில் கேமராவை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாகுற்றச் செயல்களைத் தடுக்க சிறை ஊழியர்களின் உடலில் கேமரா பொருத்த ஏற்பாடு
ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்கள் உடலில் கேமராவை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்கள் உடலில் கேமராவை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
சிறையில் ஊழியர்கள் மூலமாக மொபைல் போன், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கைதிகளுக்கு கிடைக்கிறது. மேலும், இதன் விளைவாக சிறையில் வன்முறை குற்றச் செயல்கள், போதைப் பழக்கங்கள், தற்கொலை ஆகியவை நிகழ்கின்றன.
எனவே, ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியின்போது தங்கள் உடல்களில் கேமராக்களை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.
முதற்கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறைகளுக்கு ரூ. 80 லட்சம் வழங்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கைதிகள் மற்றும் ஊழியர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேமராவில் பதிவான காட்சிகளை சிறை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்து அதனை ரகசியமாக பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறைகளில் பல்வேறு குற்றச் செயல்களை அடையாளம் காணவும் இது உதவும் என்று கருதப்படுகிறது.