மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,924 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 7,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 7,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அந்த மாநில சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அங்கு புதிதாக 7,924 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 227 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,83,723 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 13,883 ஆக உள்ளது.
அதேசமயம் இன்று 8,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,21,944 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 1,47,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 57.84 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.62 சதவிகிதம்.
மும்பை:
மும்பையில் இன்று புதிதாக 1,033 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர். 1,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,10,129 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 6,129 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 81,944 பேர் குணமடைந்துள்ளனர்.