முகப்பு
இந்தியா

பிகாரில் கார் - டிராக்டர் நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி

பிகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

பிகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பிகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் சொகுசு கார் சுக்கு நூறாக உடைந்தது. இதனால் காரில் பயணித்தவர்கள் அனைவருமே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பின்னர் காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில்  11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments