இரு செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
இரு செய்தித் தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தததால் அந்த தடையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நீக்கியது.
இரு செய்தித் தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தததால் அந்த தடையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நீக்கியது.
நேற்று இரவு கேரளாவில் இருந்து இயங்கும் 2 தொலைக்கட்சி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டதை அடுத்து, செய்தி சேனல்களில் ஒளிபரப்புத் தொடங்கியது.
தில்லி வகுப்புக் கலவரச் செய்திகளைத் தவறாக ஒளிபரப்பியதாகத் தெரிவித்து, இவ்விரு சேனல்களுடைய ஒளிபரப்புக்கும் 48 மணி நேரம் தடை விதித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
Advertisement
மலையாள மொழிச் செய்தி சேனல்களான ஆசியாநெட் நியூஸ் டிவி, மீடியா ஒன் டிவி ஆகிய இரண்டும் பிப். 25 ஆம் தேதி ஒளிபரப்பிய செய்தி அறிக்கைகளில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக அமைச்சகத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விரு சேனல்களிலும் ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் - வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி வரை - தடை விதித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஆசியாநெட் நியூஸ் டிவி, மீடியா ஒன் டிவி ஆகிய இரு மலையாள மொழி செய்தி சேனல்களும் ஒளிபரப்பை நிறுத்திய நிலையில், இதற்குக் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.
இதையடுத்து, இரு செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கும் விதிக்கப்பட்ட 48 மணி நேர தடையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.