முகப்பு
இந்தியா

கரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பிரதமர் மோடி
பகிர்:

கரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 3,300 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1 கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கம் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.  

இந்நிலையில் பிரதமர் மோடி 'ஜன் ஆஷாதி யோஜனா' பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை பேசியபோது கரோனா வைரஸ் குறித்து பேசினார். 

Advertisement

அப்போது அவர், 'கரோனா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் குறித்து  ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும். கரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தை பேண வேண்டும். மற்றவருடன் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். 

கரோனாவைரஸ் உலகிற்கு முன்னால் ஒரு பெரிய சவாலாக வந்து நிற்கிறது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments