முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,000 பேருக்கு மட்டுமே கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,089 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 8:51 PM
தாராவி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,089 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 7,089 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,35,315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 165 பேர் பலியாகியுள்ளனர், 15,656 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 40,514 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 12,81,896 பேர் குணமடைந்துள்ளனர். 2,12,439 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குப் பிறகு மிகவும் குறைவாகப் பதிவான எண்ணிக்கை இது. இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,336 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,872 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், 162 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.