முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 90,123 பேருக்கு தொற்று; பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்தது!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 9:46 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒரே நாளில் 90,123 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,20,360 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,290 பேர் உயிரிழந்ததை அடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 82,066 ஆக அகரித்துள்ளது. 

Advertisement

கரோனா பாதித்தவர்களில் தற்போது 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 39,42,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் இதுவரை 5,94,29,115 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.