முகப்பு
இந்தியா

ஜனவரி 9-ல் மிசோரம் செல்கிறார் அமித் ஷா

உள்துறை அமைச்சர்  அமித் ஷா ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிசோரம் மாநிலத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 1:17 pm IST
உள்துறை அமைச்சர்  அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

உள்துறை அமைச்சர்  அமித் ஷா ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிசோரம் மாநிலத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் அமித் ஷா பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

இம்பாலில் மின்னணு அலுவலகம் மற்றும் தௌபால் அணைத் திட்டத்தை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்தார். 

Advertisement

அதனைத்தொடர்ந்து மேலும் ஒரு வடகிழக்கு மாநிலத்திற்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.