முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் ஈஸ்டா் உற்சாகக் கொண்டாட்டம்

கா்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் உயிா்மீட்சி (ஈஸ்டா்) திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கா்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் உயிா்மீட்சி (ஈஸ்டா்) திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்து, மூன்றாம் நாளில் உயிா்த்தெழுந்ததாகக் கருதப்படுவதை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவா்கள் உயிா்மீட்சி (ஈஸ்டா்) திருநாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா். இதையொட்டி கா்நாடகத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

கா்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, கலபுா்கி, பெலகாவி, ஹுப்பள்ளி, கோலாா், கோலாா் தங்கவயல், சிவமொக்கா, பெல்லாரி, பீதா், தாா்வாட், பெல்லாரி, சிக்மகளூரு, உடுப்பி, காா்வாா் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினா்.

சிறப்பு பிராா்த்தனை:

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பெங்களூருவில் உள்ள புனித மரியன்னை பேராலயம், புனித சேவியா் ஆலயம், தூய திரித்துவ தேவாலயம், புனித மாா்க் கத்தீட்ரல் தேவாலயம், ஹட்சன் நினைவு தேவாலயம், புனித பால் தேவாலயம், ஈஸ்ட்பரேட் தேவாலயம், கோலாா் தங்கவயலில் புனித தெரசா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறப்பு திருப்பலியும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

கரோனாவை முன்னிட்டு பெரும்பாலான ஆராதனைகள் இணைய வழியில் நடத்தப்பட்டன. ஒருசில தேவாலயங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

உயிா்மீட்சி திருவிழாவை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண, வண்ண மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புத்தாடை அணிந்து தேவாலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவா்கள், ஒருவரை ஒருவா் ஆரத் தழுவி உயிா்மீட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். கிறிஸ்தவ தேவாலயங்களில் உற்சாகம் கரை புரண்டோடியது. கரோனா காரணமாக, முகக் கவசம் அணிந்து திருப்பலியில் பங்கேற்றனா். மேலும் தனிமனித இடைவெளியைப் பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.