முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் 791 பேருக்கு கரோனா 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 791 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 266 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 16 ஏப்ரல், 2021 at 11:07 AM
பிரேசிலுடனான எல்லையை மூடுகிறது பொலிவியா
பகிர்:

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 791 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 266 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து, இதுவரை மொத்த பாதிப்பு 3,44,647 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,225 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, 3,38,416 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

Advertisement

கரோனா காரணமாக இதுவரை 1,923 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையில், ஒடிசா அரசு செவ்வாய்க்கிழமை 15 முதல் 20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 5 முதல் சுந்தர்கர், ஜார்சுகுடா, சம்பல்பூர், பார்கர், போலங்கீர், நுவாபாடா, கலஹந்தி, நவரங்க்பூர், கோராபுட் மற்றும் மல்கன்கிரி ஆகிய இடங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு விதித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.15 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.