முகப்பு
இந்தியா

திரிபுரா முதல்வருக்கு கரோனா தொற்று

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
biplab071521
பகிர்:

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதில் மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.

தயவுசெய்து கரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments