முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீட்டுக்கான அளவுகோல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சா் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதற்கான அளவுகோல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதற்கான அளவுகோல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மும்பையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு சமீபத்தில் 3.5 கோடி கரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கியது. அதில் மகாராஷ்டிரத்துக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன. தொடா் வலியுறுத்தலுக்கு பிறகு மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

குறைவான மக்கள்தொகை, குறைவான கரோனா நோயாளிகள் உள்ள பல சிறிய மாநிலங்களுக்கு மகாராஷ்டிரத்துக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசிகளைவிட அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மக்கள்தொகை, அந்த மாநிலத்தில் எத்தனை போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா் ஆகியவற்றை அளவுகோல்களாக வைத்து தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மும்பையில் 70 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சாங்லி, சதாரா, பன்வேல் போன்ற இடங்களிலும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பூசி மையங்களுக்கு வரும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் திரும்பிச் செல்கின்றனா்.

இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →