முகப்பு
இந்தியா

கரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்கள் சொல்லும் நல்ல தகவல்

ரண்டாவது அலையில் கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவது குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
கரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்கள் சொல்லும் நல்ல தகவல்
பகிர்:


பெங்களூரு: நாட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது, ஆனால், முதல் அலையைப் போல் அல்லாமல், இரண்டாவது அலையில் கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவது குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மணிப்பால் மருத்துவமனை மருத்துவரும், அறிவியல் வாரிய தலைவருமான மருத்துவர் அனூப் அமர்நாத் கூறுகையில், பொதுமக்கள் பலரும் அறிகுறி தென்பட்டதுமே பரிசோதனை செய்து கொள்வதால், இந்த முறை கரோனா பாதித்தவர்களுக்கு தீவிர சிகிச்சைத் தேவைப்படுவது குறிந்துள்ளது. கடந்த கரோனா பேரிடர் காலத்தை விடவும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவிலும் கூட, கவலைக்கிடமான பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதை கடந்த காலங்களில் காண முடிந்தது. அதற்குக் காரணம், அச்சம் காரணமாக பரிசோதனை செய்து கொள்ள மக்கள் முன்வராததே முக்கியப் பிரச்னையாக இருந்தது.

அதுபோலவே கரோனா பாதித்தவர்களில் பலியாவோர் விகிதமும் குறைந்திருப்பதாகவும், பரிசோதனையை அதிகரித்திருப்பதும், மக்களுக்கு அச்சம் ஓரளவுக்கு குறைந்திருப்பதும் இதற்குக் காரணம் என்றும், தற்போதும் கூட கரோனாவுக்கு பலியாவோருக்கு வேறு சில உடல்நலப் பிரச்னைகள் இருப்பதும் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →